ADDED : பிப் 06, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள மலர் மற்றும் காய், கனி கண்காட்சிக்காக மலர்படுகை தோட்டத்தில் மலர் செடிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், வேளாண் விழா, மற்றும் 34வது மலர், காய், கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.
நாளை மறுநாள் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.கண்காட்சியில், புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து 40 ஆயிரம், மலர் செடிகள், கொய்யா மலர்கள், காய், கனி, பழ ரகங்கள், மூலிகை தாவரங்கள் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டு, இடப்பெறுகின்றன. அதற்காக தாவரவியல் பூங்காவில், மலர் செடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

