ADDED : ஜன 16, 2026 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, பசித்தவர், புசித்தல் அறக்கட்டளை சார்பில், பொங்கல் பண்டிகையையொட்டி, உணவு மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை சார்பில், கடந்த ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி முதல் நேற்று வரை, 715வது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கலையொட்டி, காந்திவீதி - வைசியாள் வீதி சந்திப்பில், நேற்று காலை பொதுமக்களுக்கு உணவு மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜனார்த்தனம் தலைமையில், முன்னாள் மாணவர்கள் சங்க நிறுவனர் அருண் தீபாஞ்சான், இயக்குனர்கள் பெருமாள், வடிவேல், வேலு, தெய்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் சங்க இயக்குனர் முருகன் செய்திருந்தார்.

