ADDED : ஜூலை 03, 2026 03:09 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் முத்துமீனா செய்திக்குறிப்பு;
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் உணவு தானிய மானியம், நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் முதல், இந்த முறைக்கு பதில், மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மட்டுமே மானிய தொகை வழங்கப்படும். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகள் வரும் 5ம் தேதிக்குள், தங்களுடைய ரேஷன் கடைக்கு சென்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டும்.
திருத்தம் தேவைப்பட்டால் ரேஷன் கடை பொறுப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
