தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா

 சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா

 சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா


ADDED : ஜூலை 03, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமரின் ஸ்வானதி மகோத்சவ் திட்டத்தில் 2,961 பயனடைந்த சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

உழவர்கரை நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு விழா ரெட்டியார்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. கொரோனா காலத்திற்கு பிறகு மூலதனம் இல்லாமல் இருந்த சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வானதி மகோத்சவ் திட்டத்தில் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 15 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 1,715 நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 940 நபர்களுக்கும், மூன்றாவது தவணையாக 306 நபர்கள் என, மொத்தம் 2,961 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக நாராயணசாமி எம்.எல்.ஏ., பயனாளிகளை பாராட்டி, ஆணையை வழங்கினார். உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us