ADDED : டிச 10, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குரும்பாபேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பெண்களுக்கு விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் ரவி, ரோட்டரி கிளப் தலைவர் விக்ரம், செயலாளர் பாலாஜி, சந்திரசேகரன், அருண் உட்பட வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் பயன்பெரும் வகையில், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மிட் டவுன் சார்பில், நாப்கின் எரியூட்டி இயந்திரம் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாட்டினை நிலைய தொழில்நுட்ப வல்லுநர் பொம்மி செய்திருந்தார்.

