/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
/
கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஆக 19, 2025 07:57 AM
புதுச்சேரி : புதுச்சேரி ஜீவானந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கிட்டு கிக்கர்ஸ் அணி சார்பில், 23ம் ஆண்டு கால்பந்து விளையாட்டுப் போட்டி நெல்லித்தோப்பு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்குசிறப்பு விருந்தினராக சபாநாயகர்செல்வம், வில்லியம் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மோடி மக்கள் சேவை இயக்கம் நிறுவனர் பிரபுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கினர். முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகையை மோடி மக்கள் சேவை இயக்கம் நிறுவனர் பிரபுதாஸ் வழங்கினார்.