/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்
/
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2025 11:42 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடி, பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
துத்திப்பட்டு, ஒலாந்திரே தொண்டு நிறுவனத்தின் வேளாண் பண்ணையில் நேற்று பொங்கல் பண்டிகைகொண்டாடப்பட்டது.இதில்பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த சுற்றுலா பயணிகளுக்கு, ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள்புதுப்பானைகளில் அரிசி, வெல்லமிட்டு, பொங்கல் பொங்கி வரும் போது,'பொங்கலோ. பொங்கல்' என உற்சாகமாகத்துடன் குரல் எழுப்பினர்.
தொடர்ந்து,தொண்டு நிறுவன மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தப்பாட்ட குழுவினருடன் இணைந்துநடனம் ஆடினர். மேலும்ஆர்வத்துடன் மயிலிறகுகளை தலையில் கட்டிக்கொண்டு, கோலாட்டமும் ஆடி மகிழ்ந்தனர்.
இது குறித்து தொண்டு நிறுவன இயக்குனர் செந்தில் கூறுகையில், '' நாங்கள் கடந்த, 10 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை வெளிநாட்டவர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது,'' என்றார்.