/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீறும் வனத்துறை.... முரண்டு பிடிக்கும் பிற துறைகள்: புதுச்சேரியில் பாம்பு பிடிப்பதில் திடீர் சிக்கல்
/
சீறும் வனத்துறை.... முரண்டு பிடிக்கும் பிற துறைகள்: புதுச்சேரியில் பாம்பு பிடிப்பதில் திடீர் சிக்கல்
சீறும் வனத்துறை.... முரண்டு பிடிக்கும் பிற துறைகள்: புதுச்சேரியில் பாம்பு பிடிப்பதில் திடீர் சிக்கல்
சீறும் வனத்துறை.... முரண்டு பிடிக்கும் பிற துறைகள்: புதுச்சேரியில் பாம்பு பிடிப்பதில் திடீர் சிக்கல்
ADDED : ஆக 16, 2025 11:39 PM
புதுச்சேரியில் மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.
சீறும் பாம்பை கண்டதும், அச்சமடையும் பொதுமக்கள் உடனடியாக வனத் துறைக்கு தகவல் கொடுக்க, மொபைல்போனை தட்டுகின்றனர். ஆனால், மறுமுனையில் இருக்கும் வனத் துறையோ, நச்சு பாம்புகளை பிடிக்காமல் முரண்டு பிடித்து தட்டி கழிப்பதிலேயே அண்மை காலமாக குறியாக இருக்கிறது.
எங்களிடம் ஒருவர் தான் பாம்பு பிடிக்க உள்ளார். நாங்கள் என்ன செய்ய முடியும் என, பொதுமக்களிடம் சராமரியாக கேள்வி எழுப்பி, சீறியபடி துண்டிக்கின்றனர். ஏற்கனவே பாம்புகளை பிடிக்க ஆறு ஊழியர்களை வனத் துறை நியமித்து இருந்த சூழ்நிலையில், தற்போது ஒருவர் தான் பாம்பு பிடிக்கிறார். இவருக்கு மட்டும் தான் 24 மணி பணி. மற்ற ஊழியர்கள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவே வனத் துறையின் சீற்றத்திற்கு காரணம்.
புதுச்சேரியில் வனத் துறை தான் காலம் காலமாக பாம்புகளை பிடித்து வருகிறது. தமிழகத்தில் வனத் துறை மட்டுமின்றி தீயணைப்பு துறை பாம்புகளை பிடிக்கின்றனர். அதுபோன்று புதுச்சேரியில் தீயணைப்பு துறை பாம்புகளை பிடிக்கலாமே என்று வனத் துறை நினைக்கிறது.
இதேபோல் கால்நடைகளை பிடிக்கும் புதுச்சேரி நகராட்சியும் பாம்பு பிடிக்கலாம் என, வனத் துறை பிற துறைகள் பக்கம் தள்ளிவிட பார்க்கிறது. ஆனால் எந்த துறைகளும் பாம்புகளை பிடிக்க தயராக இல்லை.
இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வராமல் பாம்புகள் பிடிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாக செயலி அறிமுகப்படுத்தி, பாம்புகளை மீட்டு பத்திரமாக வனத்தில் விடுகின்றனர். புதுச்சேரியிலோ, எந்த துறை பாம்புகளை பிடிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு, பாம்பு பிடிப்பது ஸ்தம்பித்துள்ளது.
அச்சமடையும் மக்கள் ஆட்களை அழைத்து அந்த பாம்புகளை அடித்து கொல்கின்றனர். மிக சிலரே அடிக்காமல் அதை விரட்டி விடுகின்றனர். இப்படியே போனால் புதுச்சேரியின் உணவு சங் கிலி சூழலில் தான் பாதிப்பு ஏற்படும். எனவே, விரைவாக பாம்பு பிடி பஞ்சாயத்திற்கு அரசு முடிவு கட்ட வேண்டும்.