/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளம் பாதித்த பகுதியில் மாஜி முதல்வர் ஆய்வு
/
வெள்ளம் பாதித்த பகுதியில் மாஜி முதல்வர் ஆய்வு
ADDED : டிச 06, 2024 05:12 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக நெட்டப்பாக்கம் தொகுதி பண்டசோழநல்லுார்,மணமேடு, கரையாம்புத்துார், பனையடிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அரசு பள்ளியில் முகாம்களில் தங்கி உள்ளனர். இதையடுத்து காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று நெட்டப்பாக்கம் தொகுதியில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
பின் முகாமில் தங்கியுள்ள மக்கள், விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து மணமேடு, நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார் உள்சளிட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர். ஆய்வின் போது காங்., மாநில செயலாளர்கள் பிரகாசம், முத்துகுமாரசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.