/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தரமற்ற மருந்து கொள்முதலுக்கு மாஜி முதல்வரே பொறுப்பு:0 அ.தி.மு.க., அன்பழகன் திட்டவட்டம்

ADDED : அக் 30, 2025 07:34 AM
புதுச்சேரி: தரமற்ற மருந்து கொள்முதலுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமியே பொறுப்பேற்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த தி.மு.க.,-காங்., கூட்டணி ஆட்சியில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான சத்து மாத்திரை கொள்முதல் செய்ய டெண்டர் பெறப்பட்டது.
இந்த டெண்டரில் பங்கேற்க, சுகாதாரத்துறையில் மருந்தாளும் பிரிவில் பணிபுரிபவர் ஒருவரை போலியாக ஒரு ஏஜென்சியை பதிவு செய்து ஆட்சியாளர்களின் துணையோடு மருந்து சப்ளை செய்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த சத்து மருந்து உள்ளிட்ட சில மருந்துகள் தரமற்றவை என அ.தி.மு.க., சார்பில் சட்டசபையில் ஆதாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் நாராயணசாமி, தனது குற்றச்சாட்டை மறுத்து, முறைகேட்டை மூடி மறைத்தார்.
இதுதொடர்பாக நடந்த தொடர் விசாரணையில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் மட்டும் காரணம் அல்ல. அப்போதைய ஆட்சியாளர்களே முழு காரணம்.
அந்த வகையில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த முறைகேட்டிற்கு அப்போதைய முதல்வர் நாராயணசாமியே முழு பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.