/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறையில் மெகா ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
/
பொதுப்பணித்துறையில் மெகா ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
பொதுப்பணித்துறையில் மெகா ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
பொதுப்பணித்துறையில் மெகா ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 30, 2025 07:01 AM
புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணிதுறையில் மெகா ஊழல் குறித்து ஜனாதிபதியிடம் புகார் கொடுக்கப்படும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் கவர்னர் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தெரிகிறது. ஆனால் பா.ஜ.,வினர் அதை பயன்படுத்தி கவர்னருக்கு பா.ஜ., சாயத்தை பூசும் வேலை செய்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை ஊழல் குறித்து தொடர்ந்து நாங்கள் குற்றச்சாட்டை கூறி வருகிறோம். தற்போது ஆம்பூர் சாலையில் 6 குறுக்கு பாலங்கள் கட்டப் பட்டு வருகிறது. இதற்கான டெண்டர் ஒருவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரியளவில் ஊழல் நடந்ததுள்ளது. 1 கோடி ரூபாய் பணியில் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு கூட வேலை நடப்பதில்லை. இது போன்று பொதுப்பணித்துறையின் ஊழல் பட்டியல் எடுத்துள்ளோம். ஊழல் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கப்படும்.
26ம் தேதி இரவு பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் படுகொலை கொடுரமான சம்பவம். அவரது வீட்டை ரவுடிகள் நோட்டமிடுவதாக கடந்த 22ம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை நடந்திருக்காது.
உமாசங்கர் குடும்பத்தினர் சி.பி.ஐ., விசாரணை தேவை எனக் கூறியுள்ளார். புதுச்சேரி போலீசார் மற்றும் அரசு மீது நம்பிக்கை இல்லை. வில்லியனுாரில் அமைச்சருக்கு நெருக்கமான செந்தில்குமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பா.ஜ., கட்சியில் சேர்பவர்கள் ரவுடிகளாக உள்ளனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்ளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எதிர்க்கட்சியினருக்கும், மக்களுக்கு எப்படி இவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியும். கொலை வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.

