/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியில் ஊழல் ஜனாதிபதியிடம் புகார் செய்வோம் மாஜி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

ADDED : மார் 17, 2025 02:44 AM
புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியில் முட்டையில் ஊழல் நடந்துள்ளது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பிங்க் பஸ், பெண் குழந்தைகளுக்கு 50 அயிரம் டிபாசிட் திட்டம் முழுமையாக நிறவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, வெறும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.
முதல்வர் ரங்கசாமிக்கு சவாலாக சொல்கிறேன். ஏப்ரல் மாதத்தில் இருந்து மகளிருக்கு உயர்த்தப்பட்ட ரூ. 2,500, மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை ரூ.1000 கொடுப்பீர்களா? மாணவர்களுக்கு கொடுக்கும் முட்டையில் ஊழல் நடக்கிறது.
புது பஸ் நிலைய கடையை முதல்வர் தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுக்கவே காலதாமதம் செய்கிறார். 6 புதிய மதுபான தொழிற்சாலைகளில் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை என்பது ஏமாற்று வேலை.
புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்திருந்தால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். ஒவ்வொன்றுக்கும் ரூ.15 கோடி கையூட்டு பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் அனைவரும் கூட்டு கொள்ளையடிக்கிறார்கள். ரெஸ்டொ பார்களை மூட வேண்டும். மதுபான தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
டில்லியில் மதுபான கொள்கையால் முதல்வரே சிறைக்கு சென்றதுபோல், அடுத்து காங்., அரசு அமைந்தால் நிச்சயம் இங்குள்ள அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள்.
என்.ஆர்.காங்., ஆட்சியில் நடக்கும் ஊழல்களை கணக்கெடுத்து வருகிறோம். இந்த பட்டியலை ஜனாதிபதியிடம் புகாராக அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.