/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
/
புதுச்சேரி அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரி அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரி அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
ADDED : டிச 19, 2025 05:41 AM

புதுச்சேரி: போலிமருந்து ஊழல் விவகாரத்தில் புதுச்சேரி அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
போலி மருந்து விவகாரத்தில் காங்., சார்பில், அண்மையில் கவர்னரை சந்தித்தோம். சி.பி.ஐ., விசாரணை, மற்றும்மருந்தகங்களில் போலி மருந்து விற்பனையை கண்டறிய வேண்டும் என, கோரிக்கை வைத்தோம். ஆனால் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டில்லி சென்று போலி மருந்துக்கு எதிராக போராட்டம் நடத்தினோம்.
மத்திய அரசு, புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மருத்து ஊழல் நடந்திருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு இதில் சம்பந்தம் இருக்கிறது. முக்கிய பங்கு சபாநாயகர் செல்வத்திற்கு உள்ளது. அவர் ராஜாவை டில்லிக்கு அழைத்து சென்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, ராஜாவிற்கு 100 கோடி ரூபாய் வங்கி மூலம் கடன் கேட்டு சிபாரிசு செய்து இருக்கிறார்.
சபாநாயகர் செல்வம் தொகுதி, இடையார்பாளையம், தவளக்குப்பத்தில் தான் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆளும் கட்சி ஏன் பதில் கூறவில்லை. சி.பி.ஐ., விசாரணை வந்தால் இவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வர்.
2017 ல் காங்., ஆட்சியில் மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். என் மீது கூறிய குற்றச்சாட்டுகளில் வழக்கு, சி.பி.ஐ., விசாரணை என எதற்கும் நான் தயார். முதல்வர், சபாநாயகர், அ மைச்சர் ஏன் சி.பி.ஐ., விசாரணையை ஏற்றுக் கொள்வதில்லை.
மருந்து கட்டுப்பாட்டு துறை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஆயிரம் வகையான மருந்துகள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜாவிடம் 100 மருந்தாளர்கள் வேலை செய்துள்ளனர். சி.பி.ஐ., முறையாக விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். மார்ட்டின் கருத்திற்கு எல்லாம் நான் பதில் கூறமாட்டேன்.இண்டி கூட்டணி பலமாக உள்ளது'என்றார்.
பேட்டியின்போது, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், வைத்திய நாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

