/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜய் எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கவில்லை முன்னாள் முதல்வர் நாராயணசாமி
/
விஜய் எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கவில்லை முன்னாள் முதல்வர் நாராயணசாமி
விஜய் எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கவில்லை முன்னாள் முதல்வர் நாராயணசாமி
விஜய் எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கவில்லை முன்னாள் முதல்வர் நாராயணசாமி
ADDED : அக் 29, 2024 06:15 AM
புதுச்சேரி: த.வெ.க. மாநாட்டில் விஜய் புதிய கருத்து எதையும் கூறவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் காங்., அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
தாழ்த்தப்பட்டோர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் அரசின் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரவில்லை என கூறியிருப்பது ஆட்சியாளர்கள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதையே வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய மின்துறை அமைச்சரிடம், புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது என முதல்வர் ரங்கசாமியும், மின்துறை அமைச்சர் நமச்சிவாயமும் வலியுறுத்தவில்லை.
இதன்மூலம் மின்துறையை தனியார் மயமாக்க அரசு வேகமாக செயல்படுகிறது என தெரிகிறது.
புதுச்சேரி பா.ஜ., தலைவர் செல்வகணபதி மீதான தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை முடியும் வரை அவர் தனது அனைத்து பதவிகளில் இருந்து விலக வேண்டும்.
சென்டாக் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் 12 பேர் போலி சான்றிதழ் அளித்து மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். இதற்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்.
த.வெ.க. முதல் மாநாட்டில் அவர் எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் மதவாத ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத்தான் கூறியுள்ளார்.
விஜய் புதிய அரசியல் பாதையை அமைப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அது இல்லை. இருப்பினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

