/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலில் தேசிய கீதம் பாடுவதில்லை: மாஜி முதல்வர் நாராயணசாமி தகவல்
/
முதலில் தேசிய கீதம் பாடுவதில்லை: மாஜி முதல்வர் நாராயணசாமி தகவல்
முதலில் தேசிய கீதம் பாடுவதில்லை: மாஜி முதல்வர் நாராயணசாமி தகவல்
முதலில் தேசிய கீதம் பாடுவதில்லை: மாஜி முதல்வர் நாராயணசாமி தகவல்
ADDED : ஜன 07, 2025 07:42 AM
புதுச்சேரி; 'நாட்டில் எந்த சட்டசபையிலும் முதலில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
அவர் கூறியதாவது;
தமிழக சட்டசபை கூட்டத் தொடருக்கு சென்ற கவர்னர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பின்பு தனது உரையை படிக்காமல் தேசிய கீதம் பாட வலியுறுத்தி உள்ளார்.
சம்பிரதாயம், விதிகளின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, கவர்னர் உரை படித்து முடித்த பின்பு தேசிய கீதம் பாடப்படும். எந்த சட்டசபையிலும் முதலில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. பா.ஜ., ஆளும் மாநிலத்தில் கூட இந்த நடைமுறை இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு இடைமறித்து தேசிய கீதம் பாட வலியுறுத்தி தனது கடமையை செய்ய கவர்னர் தவறியதுடன், கவர்னர் உரையை படிக்க கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை கவர்னர் மாற்ற கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது.
கண்டிக்கத் தக்கது. தி.மு.க., அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் கவர்னர் ரவியை ஜனாதிபதி தகுதி நீக்கம் செய்து, புதிய கவர்னரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.