/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
/
ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2025 01:49 AM
புதுச்சேரி: ரெஸ்டோ பாரில் நடந்த கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பல மாநிலங்களில் ஒரே வாக்காளர்கள் உள்ளது, ஒரே வீட்டில் அதிகமான வாக்காளர்கள் ஆகிய விஷயங்கள் பற்றி ராகுல் கேள்வி எழுப்பினார். ஆனால், முறைகேடுகளுக்கு பதில் தராமல் பா.ஜ.,வின் ஊதுகுலான தேர்தல் ஆணையம் நம்பிக்கை தன்மையை இழந்து விட்டது.
ரெஸ்டோ பாரால் ஏற்பட்ட கலாசார சீரழிவுக்கு என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசே காரணம். மக்களுக்கு பாதுகாப்பில்லை. வார விடுமுறையில் வீட்டிலிருந்து வெளியே வர புதுச்சேரி மக்கள், பெண்கள் அஞ்சுகின்றனர்.
தமிழக கல்லுாரி மாணவர் ரெஸ்டோ பாரில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரெஸ்டோ பார் அதிகாலை வரை செயல்பட்டுள்ளது. இந்த கொலைக்கு போலீசார் பொறுப்பேற்க வேண்டும். ரெஸ்டோபார் உரிமையாளர், முதல்வருக்கு நெருக்கமானவர். இதனால், வழக்கு பதிவு செய்வதில் தாமதமானது. கொலை சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இல்லையேல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வோம்.காங்., ஆட்சிக்கு வந்தால், வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள ரெஸ்டோ பார் அனுமதியை ரத்து செய்வோம்.
அரசு பணியில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்ததாக ரங்கசாமி நிருபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராகவுள்ளேன். அதே போல் பணி தராததை நான் நிருபித்தால் ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகுவாரா என கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாராயணசாமிக்கு தகுதியில்லை
நமச்சிவாயம் சாடல்
ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து, அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, 'ரெஸ்டோ பார் கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. எதற்கெடுத்தாலும், சி.பி.ஐ., விசாரணை என்றால், இங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள் எதற்கு' என்றார். மேலும், எங்கள் அரசை குறை கூற நாராயணசாமிக்கு தகுதியில்லை என்றார்.
நாராயணசாமிக்கு தகுதியில்லை
நமச்சிவாயம் சாடல்
ரெஸ்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து, அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, 'ரெஸ்டோ பார் கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. எதற்கெடுத்தாலும், சி.பி.ஐ., விசாரணை என்றால், இங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள் எதற்கு' என்றார்.
மேலும், எங்கள் அரசை குறை கூற நாராயணசாமிக்கு தகுதியில்லை என்றார்.