/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., விற்கு 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் என்.ஆர்.,காங்., தொண்டர்கள் அதிருப்தி; மாஜி முதல்வர் நாராயணசாமி பேட்டி

ADDED : ஜூலை 02, 2025 06:45 AM
புதுச்சேரி : 2026ல் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்., தலைமையில் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் மகிளா காங்., சார்பில் நடந்த ராகுல் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின்
முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபரிடம் கூறுகையில்,
புதுச்சேரி மாநிலத்தில் 3 புதிய பா.ஜ., நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணம் விளையாடி உள்ளது.
இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் பா.ஜ., வில் பணம் இல்லாமல் பதவி இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பா.ஜ., கட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மத்தியில் பிரதமர் மோடி.அதானி மற்றும் அம்பானிக்கு பிரதமராக உள்ளார்.
மேலும் புதுச்சேரியில் மீண்டும் பா.ஜ., விற்கு மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் வழங்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி முதல்வர் மீது என் ஆர்.காங்., தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
என்.ஆர்,காங்., கட்சியை பா.ஜ.,விடம் அடமானம் வைத்துள்ளதாகவும் என்.ஆர். காங்., தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
வரும் 2026ல் புதுச்சேரி மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் காங்., தலைமையில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.