sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறுதி வரை காங்., கட்சியில் இருப்பேன் மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு

/

இறுதி வரை காங்., கட்சியில் இருப்பேன் மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு

இறுதி வரை காங்., கட்சியில் இருப்பேன் மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு

இறுதி வரை காங்., கட்சியில் இருப்பேன் மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு


ADDED : மே 04, 2025 04:16 AM

Google News

ADDED : மே 04, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி காங்., சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் சிங்காரவேலர் சிலை அருகில் நடந்தது.

கூட்டத்தில் காங்., சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று பேசியதாவது:

புதுச்சேரியை சேர்ந்தவர்களை மிகப் பெரிய பதவியில் அமர்த்தியது காங்., கட்சி தான். தற்போது மத்தியில் பா.ஜ., ஆட்சியில் புதுச்சேரியின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன. பா.ஜ., கூட்டணி ஆட்சியின் முதல்வரான என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி பிரதமரை சந்தித்து பேச முடியவில்லை. புதுச்சேரி உரிமைகளை மத்திய பா.ஜ., அரசு பறித்து வருகிறது. புதுச்சேரியில் காங்., கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டியது அவசியம்' என்றார்.

காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் பேசுகையில், 'புதுச்சேயில் காங்., ஆட்சியமைக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டியது அவசியம்' என்றார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளிலும் முறைகேடு மலிந்துவிட்டது. நான் பா.ஜ., விற்கு வரவேண்டும் என பா.ஜ., எம்.எல்.ஏ., பேசியது கண்டனத்துக்குரியது. எனக்கு பல பதவிகள் அளித்து பெருமைப்படுத்தியது காங்., தலைமை. ஆகவே, எனது இறுதிக்காலம் வரை காங்., கட்சியில் இருப்பேன்' என்றார்.

கூட்டத்தில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us