/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளர்களை ஜெயிலில் தள்ளுவோம் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
/
ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளர்களை ஜெயிலில் தள்ளுவோம் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளர்களை ஜெயிலில் தள்ளுவோம் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளர்களை ஜெயிலில் தள்ளுவோம் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
ADDED : ஜூன் 23, 2025 04:58 AM
புதுச்சேரி : ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளர்களை ஜெயிலில் தள்ளுவோம் என,முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் வரியில்லா பட்ஜெட் எனக் கூறி, பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை, நில மதிப்பீட்டு தொகை 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.கொல்லைப்புறமாக வரியை போடுகின்றனர். இது மக்களை ஏமாற்றும் வேலை. 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்றனர். ஆனால் 1,500 பேருக்கு மேட்டும் தரப்பட்டுள்ளது.
அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரம் பேர் பணியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு துறை ஊழல் தொடர்பாக புகார் தந்தும் கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை விசாரித்தால் ஆட்சியாளர்களும் சிக்குவார்கள்.
புதுச்சேரி அரசின் ஊழல் சம்பந்தமான ஆதாரங்களை தேடி எடுத்து வைத்துள்ளோம். ரேஷன் அரிசியில் மட்டும் மாதம் 2 கோடி லஞ்சம் ஆட்சியாளர்களுக்கு செல்கிறது.ஊழல் பட்டியலை இறுதி செய்து ஜனாதிபதியிடம் ஆகஸ்ட்டுக்குள் மனு அளிப்போம். நாங்கள் ஆட்சியில் அமர்ந்த பிறகு 2026ல் ஊழல் செய்யும் அதிகாரிகளை நிச்சயம் சிறையில் தள்ளுவோம். ஊழல் செய்த ஆட்சியாளர்களும் சிறைக்கு செல்வார்கள்.ஊழல் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்போம்.
புதுச்சேரியில் 2026ல் காங்., தலைமையில் ஆட்சி அமையும்போதுஇந்தி மொழி கட்டாயம் என்பதை நீக்குவோம். புதிய கல்விக்கொள்கையை தமிழகம் போல் செயல்படுத்த மாட்டோம். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு பதில் தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றுவோம்.
ஒட்டுமொத்தமாக இந்த அரசு ஊழலில் சிக்கியுள்ளது. அது நிச்சயம் விரைவில் வெடிக்கும். பா.ஜ., மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதன் பின்னணிதான் முருகபக்தர் மாநாடு. எல்லாரும் முருக பக்தர்கள்தான். நானும் முருக பக்தர்தான். முருக பக்தர் மாநாடு என அரசியல் லாபம் தேட பா.ஜ., முயற்சி செய்கிறது.தமிழக மக்கள் சூழ்ச்சி வலையில் விழமாட்டார்கள்.
இவ்வாறு அவர், கூறினார்.