/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரங்கசாமியின் நாடகம் பிசுபிசுத்து விட்டது மாஜி முதல்வர் நாராயணசாமி சாடல்
/
ரங்கசாமியின் நாடகம் பிசுபிசுத்து விட்டது மாஜி முதல்வர் நாராயணசாமி சாடல்
ரங்கசாமியின் நாடகம் பிசுபிசுத்து விட்டது மாஜி முதல்வர் நாராயணசாமி சாடல்
ரங்கசாமியின் நாடகம் பிசுபிசுத்து விட்டது மாஜி முதல்வர் நாராயணசாமி சாடல்
ADDED : ஜூலை 12, 2025 03:24 AM
புதுச்சேரி: ரங்கசாமியின் நாடகம் பிசுபிசுத்துவிட்டது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சுகாதார துறை இயக்குநர் பதவியை பொருத்தவரை சிறப்பு மருத்துவம் படித்தவர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இது தான் விதிமுறை. இதனால் தான் இயக்குநராக இருந்த செவ்வேளை சுகாதார துறை இயக்குநராக கவர்னர் நியமித்தார். இந்த நியமனத்தில் முதல்வர் பரிந்துரையை கவர்னர் நிராகரித்துவிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் வேண்டும். இதனால் தான் கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டபோது எதிர்த்தோம். அதை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி ரசித்தார். இப்போது அவருக்கு அதே நிலை ஏற்பட்டுள்ளது.
சுகாதார துறை இயக்குநர் பதவிக்கு பணம் பேரம் பேசப்பட்டுள்ளது. இதற்கான முன் தொகையும் கைமாறியுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது.
இதேபோல் 6 மதுபான தொழிற்சாலை அனுமதி விவகாரத்திலும் 90 கோடி கைமாறியுள்ளது. 100 பிராந்தி கடைகள் திறக்க முடிவு செய்தனர். இது தொடர்பான கோப்புகளை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்.
இதனால் தான் ராஜினாமா செய்ய போவதாக மிரட்டும் வேலையை ரங்கசாமி ஆரம்பித்தார். அது பிசுபிசுத்து போய்விட்டது. கவர்னரை எதிர்த்து நாங்கள் ராஜினாமா செய்தோம். ராஜினாமா செய்ய போவதாக சொன்ன முதல்வர் ரங்கசாமி இப்போது கவர்னரிடம் சரண் அடைந்துவிட்டார்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது. அனைத்தையும் மக்கள் பார்த்துகொண்டுள்ளனர். அது மக்களிடம் எடுபடாது. ஒரு நிமிடம் கூட முதல்வர் நாற்காலியை ரங்கசாமி விடமாட்டர். இவரது மிரட்டல் கவர்னர் கைலாஷ்நாதனிடம் செல்லாது.
நடிகர் ரஜினி சினிமா படத்தில் சொன்னது போன்று, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி தான் மாப்பிள்ளை. ஆனால் போடுகின்ற சட்டை பா.ஜ., வினுடையது. முதல்வர் ரங்கசாமியால் மாநில அந்தஸ்தினை வாங்க முடியாது.
வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஜெயிக்க மாட்டார்கள். சட்டசபை தேர்தலுக்கு பிறகு புதுச்சேரியில் காங்., ஆட்சி அமையும். அப்போது மாநில அந்தஸ்தினை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.