/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு; காரைக்கால் மாஜி பெண் அதிகாரிக்கு வலை
/
கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு; காரைக்கால் மாஜி பெண் அதிகாரிக்கு வலை
கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு; காரைக்கால் மாஜி பெண் அதிகாரிக்கு வலை
கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு; காரைக்கால் மாஜி பெண் அதிகாரிக்கு வலை
ADDED : ஜூன் 26, 2025 01:45 AM
புதுச்சேரி : காரைக்கால், வீடுகள் தோறும் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78.80 லட்சம் முறைகேடு நடந்தது தொடர்பாக மாஜி பி.டி.ஓ., உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கடந்த 2020ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அதிகாரியாக பொறப்பேற்ற ரங்கநாதன், தனது துறை அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை மத்திய அரசின் துாய்மை பாரத் மிஷன் திட்டத்தில், நடைபெற்ற வீடுகள் தோறும் கழிவறை திட்டத்தில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
இத்திட்டத்தில் மொத்தம் 10,592 வீடுகளில் கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டு, 7,351 பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 3,231 வீடுகளுக்கு பஞ்சாயத்து அளவில் மகளிர் கூட்டமைப்பு மூலம் கட்டித்தர உத்தரவிடப்பட்டது.
இதற்கு ரூ.3.04 கோடி செலவாகும். ஆனால், அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த பிரேமா கூடுதலாக ரூ.78.80 லட்சம் சேர்த்து, ரூ.3.83 கோடியை 12 காண்ட்ராக்டர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
இந்த முறைகேடு கருவூல கணக்கு துறை ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில், முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா மற்றும் காண்ட்ராக்டர்கள் 12 பேர் மீது, புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிந்து, பிரேமா உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள பிரேமா, இப்புகார் தொடர்பாக ஏற்கனவே, 'சஸ்பெண்டில்' உள்ளது குறிப்பிடத்தக்கது.