/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி அமைச்சர் மகன் காங்.,கில் இணைய முடிவு
/
மாஜி அமைச்சர் மகன் காங்.,கில் இணைய முடிவு
ADDED : ஜன 17, 2025 06:09 AM

புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் காங்., பொது செயலாளர் வேணுகோபாலை சந்தித்து பேசினார்.
முன்னாள் அமைச்சர் கண்ணன், சபாநாயகர், ராஜ்யசபா எம்.பி., உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவரது மகன் விக்னேஷ் தற்போது மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர், காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். அதற்காக, டில்லியில் அகில இந்திய காங்., பொது செயலாளர் வேணுகோபாலை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, மகாராஷ்டிரா காங்., பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா எம்.எல்.ஏ., புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான காங்., பொறுப்பாளர் அஜோய்குமார் ஆகியோரையும் விக்னேஷ் சந்தித்து பேசியுள்ளார்.