/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்த தடை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்த தடை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்த தடை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்த தடை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : டிச 15, 2024 05:46 AM
புதுச்சேரி : 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்த தடை விதிக்க வேண்டும் என, கவர்னருக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கோரிக்கை விடுத்தார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியை ஆளும் அரசு தொடர்ந்து கலாசார சீரழிவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில், அருவருக்கத்தக்க கலாசாரம் அரங்கேறியது. மது போதையில் நடனம் ஆடக்கூடிய ஒரு கேவலத்தை புதுச்சேரி மண்ணில் அரங்கேற்றப்பட்டது.
இப்போது மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்தப்பட உள்ளது. கடற்கரை சாலையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நடத்துவதற்கு கவர்னர் தடை விதிக்க வேண்டும். வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளி அருகில் ரெஸ்டோபார்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் செல்வோம்.
இதுபோன்ற கலசார 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடந்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசாங்கம், மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் செய்யக் கூடிய அனைத்து அம்சங்களையும் செய்து வருகிறது.
காங்., மற்றும் தற்போதைய அரசாங்கம் இல்லாத புதிய அரசாங்கம் உருவாக அனைத்து தரப்பு மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.