UPDATED : நவ 04, 2026 12:05 PM
ADDED : நவ 04, 2026 12:03 PM

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முன்னாள் முதல்வர்கள் வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன், தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். பிறந்தநாளை முன்னிட்டு பெத்து செட்டிப்பேட்டை சுப்பிரமணியர் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டார்.
தொடர்ந்து, மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தார்.
லாஸ்பேட்டை சுப்ரமணியர் கோவிலில் வட்டார காங்., தலைவர் ராஜா ஏற்பாட்டில் தங்க தேர் இழுத்து வழிபட்டார்.
லாஸ்பேட்டையில் நடந்த விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதனுக்கு, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், நேரு, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்த ராமன், பாஸ்கர் மற்றும் காங்., நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கமலா அறக்கட்டளை சார்பில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
லாசுப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 10வது மற்றும் பிளஸ் 2 பெதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை காங்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.
