ADDED : மே 21, 2025 07:11 AM

புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஜெயமூர்த்தியின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஜெயமூர்த்தியின் மனைவியும், காங்., மாநில செயற்குழு உறுப்பினருமான விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஏற்பாட்டில் தொகுதி முழுதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தொழிலாளிகளுக்கு தட்டுவண்டி, 4 பெண்களுக்கு தையல் இயந்திரம், மிக்சி, சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், ஈரம் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி நினைவு நாளை முன்னிட்டு காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.