/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேசிய பொதுச்செயலரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு
/
பா.ஜ., தேசிய பொதுச்செயலரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு
பா.ஜ., தேசிய பொதுச்செயலரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு
பா.ஜ., தேசிய பொதுச்செயலரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு
ADDED : ஆக 01, 2025 02:31 AM

பாகூர்: பா.ஜ., முன்னாள் பொதுச் செயலாளர் தங்க விக்ரமன், டில்லியில் கட்சியின் தேசிய அமைப்பு பொது செயலரை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.
புதுச்சேரி பா.ஜ., முன்னாள் பொதுச்செயலாள ரான முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்ரமன் டில்லி சென்று, கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷை சந்தித்து, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.
அப்போது, அவர், ''புதுச்சேரியில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய வாய்ப்பு அளித்து கட்சி அமைப்பை வளர்க்க வலியுறுத்தினார்.
மேலும், கட்சியில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும், பிரதிநிதித்துவம் பெரும் வகையில் அனைத்து பெரும்பான்மை சமுதாய மக்களையும், கிராமப்புற விவசாய மக்களையும், பொறுப்பு கொடுத்து கட்சியை வலிமை பெற செய்ய கேட்டுக் கொண்டார். இதுதொடர்பான மனுவையும், அவரிடம் வழங்கினார்.