/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை பொறியாளரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு
/
மின்துறை பொறியாளரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு
ADDED : நவ 16, 2024 02:29 AM

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, மின்துறை உதவிப்பொறியாள பன்னீர்செல்வத்திடம் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா மனு அளித்தார்.
மனுவில், மழைக்காலம் என்பதால் திருபுவனை தொகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். பழுதான மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் பாதைகளில் இடையூராக உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். மழைக்காலத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட உதவிப் பொறியாளர் பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். திருவாண்டார்கோவில் இளநிலைப் பொறியாளர் பழனிவேல் மற்றும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

