/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்தில் அக்கறை இல்லை முதல்வர் மீது மாஜி எம்.பி., குற்றச்சாட்டு
/
மாநில அந்தஸ்தில் அக்கறை இல்லை முதல்வர் மீது மாஜி எம்.பி., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்தில் அக்கறை இல்லை முதல்வர் மீது மாஜி எம்.பி., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்தில் அக்கறை இல்லை முதல்வர் மீது மாஜி எம்.பி., குற்றச்சாட்டு
ADDED : மார் 06, 2026 04:07 AM
புதுச்சேரி: மாநில அந்தஸ்து கோரிக்கை முதல்வர் அக்கறையாக பிரதமரிடம் கேட்கவில்லை என, மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் புதுச்சேரி அரசின் விழாவில் கலந்துகொண்டபோது, முதல்வர் மாநில அந்தஸ்து குறித்து பேசியதை அடிப்படையாகக் கொண்டு, அவரை தேர்தலைப் புறக்கணிக்கத் தயாரா அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறத் தயாரா என்று கேள்வி எழுப்புவது பொருத்தமல்ல. அவர், மாநில அந்தஸ்து கோரிக்கையை உள்ளார்ந்த அக்கறையுடன் முன்வைக்கவில்லை.
பொதுமக்கள் முன் தாம் இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளவர் எனக் காட்டிக்கொள்ளவே ஒரு சம்பிரதாய முறையில் மாநில அந்தஸ்து இல்லாதது எங்களுக்கு வலியைத் தருகிறது என, குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கையை உண்மையிலேயே செல்ல வேண்டும் என அவர் விரும்பியிருந்தால், தமது உரையில் மாநில அந்தஸ்து குறித்த பகுதியை ஆங்கிலத்தில் நேரடியாக பிரதமரிடம் முன்வைத்து, பதிலைப் பெற்றிருக்கலாம். அல்லது மாநில அந்தஸ்து குறித்த கோரிக்கை மனுவை ஆங்கிலத்தில் தயாரித்து வழங்கி, அதற்கு பதிலை எதிர்பார்த்திருக்கலாம். இந்த ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மாநில அந்தஸ்து என்பது அவருக்கு அரசியல் வசதிக்கான கோரிக்கையாக மட்டுமே உள்ளது. இந்த மனப்பான்மையுடன் இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

