ADDED : செப் 21, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்,: ஆரோவில் அருகே ஓய்வு பெற்ற புதுச்சேரி எஸ்.ஐ., மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த பட்டானுார் மஞ்சினி நகரை சேர்ந்தவர் சுப்புராயன், 65; புதுச்சேரி ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி 3 ஆண்டிற்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் ஹேமச்சந்திரன், 24; பி.இ., படித்துள்ளார்.
கடந்த 18ம் தேதி, சுப்புராயன் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, ஹேமச்சந்திரன், துாக்கில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சுப்புராயன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ேஹமச்சந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.