/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்
/
மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்
மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்
மழையால் பாதித்தவர்களுக்கு மாஜி சபாநாயகர் உணவு வழங்கல்
ADDED : டிச 02, 2025 04:35 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து உணவு வழங்கினார்.
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர், அன்னை இந்திரா வீதி, ராமன் நகர், நெருப்புக்குழி, செண்பக விநாயகர் கோயில் வீதி, நெசவாளர் நகர், பாவேந்தர் வீதி, பூந்தோட்டம், குளக்கரை வீதி, மடுவுப்பேட், சேத்திலால் நகர், சலவையாளர் நகர் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 நாட்களாக உணவு வழங்கினார்.
இதில், சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், என்.ஆர்.காங்., மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.