பெங்களூருவில் ஆன்மிக நிகழ்ச்சி முன்னாள் சபாநாயகர் பங்கேற்பு
பெங்களூருவில் ஆன்மிக நிகழ்ச்சி முன்னாள் சபாநாயகர் பங்கேற்பு
ADDED : செப் 12, 2026 06:15 AM

புதுச்சேரி: பெங்களூருவில் நடந்த ரவிசங்கர் சுவாமிகளின் ஆன்மிக சேவையை பாராட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.
மன அழுத்தமில்லாத, வன்முறையற்ற சமுதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் ஜி, மன அமைதியை மீட்டெடுக்க உதவும் 'சுதர்சன கிரியா' போன்ற சுவாச அடிப்படையிலான தியான முறைகளை உலகெங்கும் பரப்பி வருகிறார்.
அதன்படி ஸ்ரீ ரவிசங்கர் ஜி 187 நாடுகளுக்கு பயணம் செய்து சிறைக் கைதிகள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு சுதர்சன கிரியா தியான முறை பயிற்சிகளை வழங்கி அவர்களின் மன அமைதியை மீட்டெடுக்கவும் ஒழுக்க நெறியில் வாழவும் பயிற்சி அளித்தார்.
ரவிசங்கர் சுவாமிகளின் இந்த ஆன்மிக சேவையை பாராட்டி பெங்களூருவில் சத்சங்க நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு ஆன்மிக செம்மல் ரவிசங்கர் ஜியை பாராட்டி பேசினர்.
