/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுச்சேரியில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களுக்கு அடித்தளம்'; மாஜி முதல்வருக்கு என்.ஆர்.காங்., பதிலடி

ADDED : டிச 21, 2024 06:32 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களுக்கு என்.ஆர்.காங்., அடித்தளமிட்டு வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, என்.ஆர்.காங்., பதிலடி கொடுத்துள்ளது.
என்.ஆர்.காங்., செய்தி தொடர்பாளர் ஜெனார்த்தனன் அறிக்கை;
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி கவிழும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த 4 ஆண்டுகளாக ஆருடம் கூறி வருகிறார்.
இது ஆருடமா அல்லது ஆசையா என கூற வேண்டும். என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமி, வரும் 6 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற அடித்தளம் போடும் பணிகளை செய்து வருகிறார் என்பதை நாராயணசாமி அறிய முயற்சிக்கவில்லை.
முதல்வர் ரங்கசாமியின் நிர்வாகத்தில் குறை கூறிய லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் கருத்திற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி இவ்வளவு சிறத்தை எடுத்து கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
முதல்வர் ரங்கசாமியை கட்சி மற்றும் அரசியலில் பல பொறுப்பு வகித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமியால் அறிந்து கொள்ள சிரமமாக இருக்கும்போது, லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டினுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.