/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம்
/
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம்
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம்
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம்
ADDED : மே 06, 2025 04:45 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அக்மூ கேடரில் பணியாற்றும் 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக புதுச்சேரியில் இருந்து 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பிரியதர்ஷினி அருணாசல பிரதேசத்திற்கும், ரெட்டி மிசோரத்திற்கும், முகமது மன்சூர் சண்டிகாருக்கும், ருத்ர கவுடு லடாக்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அண்மையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இவர்களுக்கு பதிலாக டில்லியை சேர்ந்த 2014ம் பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முகமது அசான் அபித் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரியின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை 19 இல் இருந்து 16 ஆக குறைந்துள்ளது.