/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலை அறிவியல் படிப்புகளுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வு
/
கலை அறிவியல் படிப்புகளுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வு
கலை அறிவியல் படிப்புகளுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வு
கலை அறிவியல் படிப்புகளுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வு
ADDED : செப் 19, 2024 02:00 AM
புதுச்சேரி,: நான்காம் கட்ட கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு இன்று வரை கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க கால அவகாசத்தை சென்டாக் நீட்டித்துள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதலாமாண்டில் காலியாக உள்ள கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு இதுவரை சென்டாக் மூன்று கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்பியுள்ளது.
அடுத்து நான்காம் கட்ட கலந்தாய்வு நடத்த உள்ளது. இதற்கான கவுன்சிலிங் முன்னுரிமைகளை நேற்று 18 ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையில், பி.டெக்., தவிர்த்த பி.எஸ்சி., அக்ரி, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்சி., பாரமெடிக்கல் படிப்புகள், பி.பார்ம், பி.ஏ.எல்.எல்.பி., டிப்ளமோ பாராமெடிக்கல் படிப்புகள், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளுக்கு இன்று 19ம் தேதி காலை 11 மணி வரை கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை கொடுக்காமல் வெறும் காலியாக விடப்பட்டு இருந்தால் அம்மாணவர்களுக்கு சீட் ஏதும் ஒதுக்கப்படாது என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.