sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு பட்ஜெட் தாக்கல்; இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு

/

 நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு பட்ஜெட் தாக்கல்; இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு

 நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு பட்ஜெட் தாக்கல்; இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு

 நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு பட்ஜெட் தாக்கல்; இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு


ADDED : பிப் 02, 2026 03:04 AM

Google News

ADDED : பிப் 02, 2026 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கட்டமைப்பு, வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் என மத்திய பட்ஜெட்டினை இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை பாராட்டியுள்ளது.

இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி மாநில கவுன்சில் துணைத் தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் கடலோர சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய மேலாண்மைக் கழகத்துடன் இணைந்து இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு வழங்குவதற்கான ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக புதுச்சேரி விளங்கும் என சி.ஐ.ஐ எதிர்பார்க்கிறது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10,000 கோடி வளர்ச்சி நிதி, உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் 200 பாரம்பரிய தொழில் தொகுப்புகளின் மறுமலர்ச்சி ஆகியவை புதுச்சேரியின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சார்ந்த பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பயனளிக்கும் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

10,000 கோடி மதிப்பிலான 'பயோபார்மா சக்தி' திட்டம், மருத்துவ பரிசோதனை உள்கட்டமைப்பு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளை வலுப்படுத்தும்.மாவட்டந்தோறும் பெண்களுக்கான விடுதிகள், தோல் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அதிவேக ரயில் வசதி, மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய உயர் அதிகாரக் குழு அமைத்தல் போன்றவை வரவேற்கத்தக்கது.அத்துடன், நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாக குறைத்துள்ள நடவடிக்கையும் பாராட்டத்தக்கது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us