தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலி ஆணை அனுப்பி மோசடி

சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலி ஆணை அனுப்பி மோசடி

சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலி ஆணை அனுப்பி மோசடி


ADDED : அக் 12, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2024 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: சி.பி.ஐ., விசாரணைக்கு அழைப்பதாக போலியான ஆணை அனுப்பி மோசடி நடந்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் தினசரி புது புது முறையில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகிறது.

நன்கு படித்த பலரும் எளிதில் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். தற்போது புது வித மோசடி அதிகமாக அரங்கேறி வருகிறது.

வாட்ஸ்ஆப் காலில் வரும் மர்ம நபர்கள், நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருட்கள் இருந்தது.

உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு மூலம் வெளிநாட்டிற்கு பணம் அனுப்பி மோசடி நடந்துள்ளது.

அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என, சி.பி.ஐ., அனுப்பியதுபோல் போலியான வழக்கு பதிவு செய்த ஆணை ஒன்றை அனுப்புகின்றனர்.

அதில் புதுச்சேரி நபரின் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாக உள்ளது. இதை கண்டதும் பலரும் அதிர்ந்து என்ன செய்வது என தெரியாமல் திகைக்கின்றனர்.

வேறு வழியின்றி சி.பி.ஐ., அதிகாரிகள் என கூறும் நபரிடம், தன் மீது எந்த தவறும் இல்லை என முறையிடும்போது, மோசடி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வங்கி கணக்கில் உள்ள பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி நிருப்பிக்க கூறுகின்றனர்.

அதன்படி பலரும் பணத்தை அனுப்பி இழந்து வருகின்றனர். இதனால் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது என வரும் உத்தரவுகளை யாரும் நம்ப வேண்டாம், அவை அணைத்தும் போலியானது என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாசு ஆர்டரில் மோசடி


தற்போது தீபாவளி சீசன் துவங்கி உள்ளது. ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வருகிறது.

கடந்த ஆண்டு 78 நபர்கள் பட்டாசு ஆர்டர் கொடுத்து ஏமாந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 புகார்கள் வந்துள்ளது.

எனவே, போலியான இணையதளத்தில் பணத்தை கட்டி இழக்க வேண்டாம் என, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us