sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது மோசடி வழக்கு

 கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது மோசடி வழக்கு

 கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது மோசடி வழக்கு


ADDED : பிப் 26, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, ஜீவானந்தபுரம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மதுபாலா, 32. இவர், தனது 1,856 சதுர அடி மனையில் வீடு கட்ட, வில்லியனுாரை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் அருள்ராஜை அணுகினார்.

அதில், இரண்டு தளங்களுடன் கூடிய வீடு கட்டுவதற்கு, ரூ. 44 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேசி, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் போட்டார். கட்டுமான பணியை துவங்க பல்வேறு தவணைகளாக மதுபாலா, அருள்ராஜிடம் ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட அருள்ராஜ் கட்டுமான பணிகளை மந்தமாக செய்து வந்தார்.

அதிருப்தி அடைந்த மதுபாலா, அருள்ராஜிடம் வீடு கட்டுமான பணிகளை இனி மேற்கொள்ள தேவையில்லை எனக் கூறி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு, அருள்ராஜ் வீட்டின் கட்டுமான பணிக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் செலவாகி விட்டதாக கூறி, 5 லட்சத்தை மட்டும் கொடுத்தார்.

மீதி ரூ. 8 லட்சத்தை விரைவில் திரும்ப கொடுப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் தெரிவித்தார். மீதி பணத்தை கொடுக்காமல் அருள்ராஜ் அலைகழித்து வந்தார். பணத்தை திரும்ப கேட்ட மதுபாலாவை திட்டி, அருள்ராஜ் கொலை மிரட்டல் விடுத்தார்.

மதுபாலா அளித்த புகாரின் பேரில், டி நகர் போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் அருள்ராஜ் மீது மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us