/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி; நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி; நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி; நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி; நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜன 09, 2024 07:35 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த கருப்புகேட் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்,48. தனியார் நிறுவன மசாலா பொருட்கள் விற்பனை ஏஜன்டாக உள்ளார்.
இவர் மாதாந்திர சீட்டு நடத்தியுள்ளார். இதில் அதே பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு கட்டியுள்ளனர். சீட்டு காலம் முடிந்தும் அதில் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் பல பெண்களிடம் கடனாக பெற்ற பணத்தையும் அய்யப்பன் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.
இது தவிர, அந்த பகுதியில் மேலும் சில பெண்கள் நடத்திவந்த மாதாந்திர ஏலச்சீட்டில் சேர்ந்த அயப்பன், சில மாதங்களிலேயே சீட்டை எடுத்துவிட்டு தொடர்ந்து பல மாதங்களாக பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் அய்யப்பன் தனக்கு சொந்தமான வீட்டை விற்றுவிட்டு, குடும்பத்தோடு தலைமறைவானார்.
தகவல் அறிந்து, அவரிடம் ஏலச்சீட்டு கட்டி, ரூ. 35 லட்சத்திற்கு மேல் இழந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அங்கு விசாரனைக்கு வந்த அய்யப்பன், 'நாளை பேசி கொள்ளலாம்' என கூறிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று இரவு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பெண்களிடம் 'இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க முடியாது. கடலுாரில் உள்ள பொருளாதார குற்றபிரிவு போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என போலீசார் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களை, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் சமாதானம் செய்து அனுப்பினர்.