ADDED : மார் 15, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் 5 பேரிடம் ரூ. 4.38 லட்சம் பணம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் மனோஜ்குமார் இவரது மொபைல் போனில் பேசிய மர்ம நபர், உங்களுக்கு கூரியர் வந்துள்ளது. அதற்காக அவரது மொபைலுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.25 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளார்.
அதேபோன்று, கோபிநாத் என்பவரிடம் அதிகம் லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.35 ஆயிரமும், பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.1.16 லட்சமும், பிரியா என்பவரிடம் ரூ.1.42 லட்சமும், ஜான் கென்னடி என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.20 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

