UPDATED : நவ 01, 2026 05:47 PM
ADDED : நவ 01, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ரகோத்தமன் மகன் ருத்ரமோகன்,27; தனியார் கம்பெனி ஊழியர்.
இவரை கடந்த 29ம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசி புதிய ஏ.டி.எம்., கார்டு வழங்க உள்ளதாக கூறி ஓ.டி.பி., கேட்டுள்ளார். அதை நம்பிய அவர் தனது வங்கி விவரங்கள் மற்றும் ஓ.டி.பி.,யை தெரிவித்தார்.
அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த ருத்ரமோகன் முதலியார்பேடடை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
