தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பஸ் டிரைவர் மீது வழக்கு

பஸ் டிரைவர் மீது வழக்கு

பஸ் டிரைவர் மீது வழக்கு


UPDATED : நவ 01, 2026 05:47 PM

ADDED : நவ 01, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 05:47 PM ADDED : நவ 01, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படாத இடத்தில் பஸ் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிய தனியார் பஸ் டிரைவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வில்லியனுார் போக்குவரத்து போலீசார் அரியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த தனியார் பஸ் ஒன்று, சர்வீஸ் சாலையை பயன்படுத்தாமலும், அனுமதிக்கப்படாத இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பஸ்சின் டிரைவர் புதுச்சேரி, சோரப்பட்டைச் சேர்ந்த அன்புராஜ், 29; மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us