/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச சைக்கிள் சிவா எம்.எல்.ஏ., வழங்கல்
/
இலவச சைக்கிள் சிவா எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜூலை 02, 2025 02:03 AM

வில்லியனுார் : புனித லுார்து அன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்ளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா இலவச சைக்கிள் வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் வில்லியனுார் புனித லுார்து அன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்வின் அன்பரசு தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மாணவர்ளுக்கு சைக்கிள்களை வழங்கினார். மேலும் பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் மணிகண்டன், செல்வநாதன், ஹாலித், அங்காளன், காளி, கலிமுல்லா, கதிரவன், அரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், ரபீக், டோமினிக், செல்வநாயகம், சரவணன், மிலிட்டரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.