UPDATED : நவ 13, 2026 08:30 PM
ADDED : நவ 13, 2026 08:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம் தியாகி துளசிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
