/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பெண்கள் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்
/
அரசு பெண்கள் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : மே 07, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் செம்பியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் காயத்திரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 89 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் தனபூபதி, பா.ஜ., தொகுதி தலைவர் சக்திவேல், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் ராஜவதனி நன்றி கூறினார்.