/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மின்சார திட்டம்: விழிப்புணர்வு முகாம்
/
இலவச மின்சார திட்டம்: விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 09, 2025 06:08 AM

புதுச்சேரி: மின்துறை மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி முகமை சார்பில் பிரதம மந்திரி சூரிய வீடு, இலவச மின்சார திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் ரெட்டியார்பாளையம் ஜவஹர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரதம மந்திரி சூரிய வீடு திட்டம்,வீட்டின் கூரையில் ஒளிமின் நிலையம் அமைப்பது, அரசு மானியம், வங்கிக் கடன் குறித்து மின்துறை அதிகாரிகள் விளக்கினர். முகாமில் சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பதற்கு குறைந்தபட்ச வட்டியில் வங்கிக்கடன் வழங்கபடுவது குறித்தும் விளக்கப்பட்டது.முகாமில் 140க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் 45 நுகர்வோர்கள் இத்திட்டத்தில் சேர பதிவு செய்தனர்.