ADDED : மே 23, 2025 06:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி வர்த்தக சபை, ஜோதி கண் பராமரிப்பு மையம் சார்பில் வர்த்தக சபை அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கண் பரிசோதனை முகாமை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். ஜோதி கண் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். இதில், 500க்கும் மேற்பட்ட வர்த்தக சபை உறுப்பினர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் ரவி, பொதுச்செயலாளர் எஸ்.ரவி, இணைப்பொதுச்செயலாளர் நமச்சிவாயம், பொருளாளர் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் தேவகுமார், முகமது சிராஜ், ஆனந்தன், ஞானசம்பந்தம், குகன், சதாசிவம், ஜெய்கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.