/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சவடீயில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
/
பஞ்சவடீயில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : டிச 20, 2024 05:56 AM
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில் மருத்துவமனையில், நாளை 21ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.
பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் பாண்டிச்சேரி போர்ட் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம், நாளை 21ம் தேதி காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இம் மருத்துவ முகாமில், பிரபல கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமலராஜ், சுகந்தி பிரபாகர் ஆகியோர் தங்கள் குழுவினருடன் பங்கேற்று கண் பரிசோதனை செய்ய உள்ளனர்.
முகாமில் பங்கேற்பவர்களுக்கு, பரிசோதனைக்கு பின், கண் நோய் உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகள் இருந்தால் தகுந்த பரிசோதனை செய்து, கண்ணாடி தேவைப்படுவோருக்கு ஒரு வாரத்திற்குள் இலவசமாக வழங்கப்படும்.
கண்களில் வேறு குறைபாடுகள் இருப்பின், விரிவான பரிசோதனைக்கு பின், டாக்டர்கள் குறிப்பிடும் தேதியில் அவர்கள் சொல்லும் கண் மருத்துவமனைக்கு சென்று மறுபரிசோதனை செய்து கொள்ளலாம்.