சோலார் பேனல் பொருத்தினால் இன்வொட்டர் பேட்டரி இலவசம்
சோலார் பேனல் பொருத்தினால் இன்வொட்டர் பேட்டரி இலவசம்
ADDED : ஆக 22, 2026 06:15 PM
புதுச்சேரி: புதுச்சேரி பீட்டா பவர் கார்போரேஷன் சார்பில், மானியத்தில் வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக இலவசமாக இன்வொட்டர் பேட்டரி வழங்கப்படுகிறது.
அரசு உரிமம் பெற்ற சோலார் விற்பனையாளரான பவர் வேல்டு சிஸ்டம், கடந்த 2002ம் ஆண்டு முதல் பவர் சொலுசன்ஸ் பேக் அப் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள வீடுகளுக்கு மானியத்தில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு வருகிறது. சோலார் பேனல் பொருத்த மத்திய அரசு மானியமாக 78 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு மானியாக 30 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும், உற்பத்தியாளரான மெசிமோ கம்பெனி சார்பில், சிறப்பு சலுகையாக 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்வொட்டர் பேட்டரியை சோலார் பேனல் பொருத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என, பவர் வேல்டு சிஸ்டம் உரிமையாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரி நுாறடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி ராஜிவ்காந்தி சதுக்கம் அருகில் உள்ள பவர் வேல்டு சிஸ்டம் நிறுவனத்தின் 9842784934 மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
