UPDATED : ஆக 22, 2026 06:27 PM
ADDED : ஆக 22, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் நிறுத்தப்பட்ட டாக்டரின் ஸ்கூட்டர் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, தானாம்பாளையம், அங்காளம்மன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு மகள் சினேகா, 23; கதிர்காமம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். கடந்த 16ம் தேதி காலை சினேகா தனது ஸ்கூட்டரில் (பி.ஒய் 01 சி.வி 4457) மருத்துவமனைக்கு சென்று, ஊழியர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.
வேலை முடிந்து இரவு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது ஸ்கூட்டரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், தன்வந்திரி நகர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
