/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் இலவச மருத்துவ முகாம்
/
உழவர்கரை தொகுதியில் இலவச மருத்துவ முகாம்
ADDED : மார் 25, 2025 04:05 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில், என்.ஆர். காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி சார்பில், உழவர்கரை தொகுதி மூலக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமை, உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
முகாமில் மணக்குள விநாயகர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியின் 20 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்று, மக்களுக்கு பொது மருத்துவம், இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்டு, சர்க்கரை மற்றும் ரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனைகள் செய்து, இலவசமாக மருந்துகள் வழங்கினர். தொடர்ந்து, பெண்களுக்கு மகப்பேறு ஆலோசனைகள் அளிக்கப்பட்டது.
இதில், உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.